Friday, March 9, 2012

விரதம் !!!



இன்னிக்கு என்ன விரதம்? வெள்ளிக்கிழமை விரதமா? சந்தோஷிமா விரதமா? சஷ்டி விரதமா?

ஆமாம்? எதுக்கு விரதம் இருக்கீங்க? நல்ல வேலை கெடைக்கவா? கல்யாணம் சரியாகணுமா? கொழந்த வேணுமா? மன த்ருப்திக்காகவா?

வேண்டுதல் ஏதுவா வேணுமானாலும் இருக்கட்டும். ஆனா, ஏன் விரதம் இருக்கணும்? சாப்பிடாம இருந்து கேட்டாத்தான் சாமி குடுப்பாரா? நம்ம சாமிக்கு எதுக்கு இவ்ளோ சிறுபிள்ளைத்தனம்?

இது சாமி சொல்லலை... ஆசாமி சொன்னது... அப்படின்னு நான் நம்பறேன். எப்பிடின்னு கேளுங்க!

நம்ம பாட்டுக்கு தினமும் வகை வகையா சாப்பிட வேண்டியது... அப்புறம் அங்க வலிக்குது... இங்க வலிக்குது ன்னு பொலம்ப வேண்டியது... நமக்கு வாரத்துல ஒரு நாள் ஓய்வு வேணும்னு நினைக்கிறோமே... அதே மாதிரி நம்ம ஒடம்புக்கு வேண்டாமா? அதுக்கு தான் நம்ம தாத்தா பாட்டிங்க எல்லாருமா சேந்து இப்பிடி ஒரு வழி கண்டு பிடிச்சாங்க.

நம்ம தான் சும்மா சொன்ன எதையுமே செய்ய மாட்டோமே! அதுக்கு தான் கூப்பிட்டாங்க நம்ம சாமிய, தொணைக்கு! சாமி பேர சொன்ன ஒடனே எல்லாரும் விதம் விதமா விரதம் இருக்கோம் பாத்தீங்களா!

இப்போ சமீபத்துல லண்டன்-ல ஒரு ஆராய்ச்சி செஞ்சி விஞ்ஞானிகள் எல்லாரும் கண்டுபிடிச்ச விஷயம் இது தான்: சாப்பிடாம இருக்கும் பொழுது, நம்ம மூளைல சுரக்கக்கூடிய ஒரு திரவம், நம்ம மூளையோட செயல் திறனை அதிகப் படுத்துதாம். இது எப்டி இருக்கு?

நம்ம தாத்தா பாட்டி எல்லாம் சும்மா இல்ல... செம மூளை... அதான் பல ஆயிரம் வருஷம் முன்னாடியே இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணி, நம்மள எப்பிடி சொன்னா கேப்பமோ அப்பிடி சொல்லி இருக்க வெச்சிருக்காங்க, விரதம்!!!

சரி... வாங்க இருக்கலாம், விரதம்!!!

No comments:

Post a Comment