Friday, February 3, 2012

கண் திருஷ்டி !!!



கண்ணு படப் போகுதா? எனக்கா? சீக்கிரம் சுத்தி போடுங்க !!!

அதென்னது சுத்திப் போடறது ?! எத சுத்திப் போடணும்?! ம்ம்... சொல்றேன்.

ஒரு மனுஷன் வாழ்க்கைல கொஞ்சம் சந்தோஷமா, நல்ல வேலை/தொழில், நல்ல குடும்பம் அப்படி இப்படி னு இருந்தா, ஒடனே அத பாத்து கொஞ்சம் ஏங்குறவங்க இருப்பாங்க... "அடடா அவன மாதிரியே நமக்கும் எல்லாம் நல்லா நடந்தா நல்லாருக்குமே" ன்னு. இன்னும் சில பேர் எப்படி யோசிப்பாங்க தெரியுமா? "ஹ்ம்ம்ம்... எல்லாம் நல்லாத்தான் இருக்கு.... ஆனா என்னமோ தப்பு இருக்கு... சரி இல்ல... இதெல்லாம் எங்க நிலைக்க போகுது..." இது எப்படி இருக்கு?!

இந்த மாதிரி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி அந்த மனுஷன பாப்பாங்க. இந்த பார்வையத்தான் "கண் திருஷ்டி" ம்பாங்க. இப்படி பாக்கறதால அவங்களோட கெட்ட அதிர்வுகள் (Negative Vibes) அந்த மனுஷனுக்கும் போய் சேருது. சில சமயங்களில், அது அவனை பாதிக்கலாம், சில சமயங்களில் பாதிக்காமலும் போகலாம். அது அவனுடைய மனோபலத்தை பொருத்ததாம் !!!

இந்த கண் திருஷ்டிக்கு நம்ம தாத்தா பாட்டிகள் தேடின வழி தான் "கண் திருஷ்டி கழிக்கறது". அதாவது நம்மள சுத்தி இருக்க கெட்ட அதிர்வுகள உப்பு, மிளகு மாதிரியான கிருமி நாசினி பொருட்களைக் கொண்டு சுத்தி எடுத்து வீசிடலாம்னு அவங்க நம்பினாங்க. நம்பினதையே செஞ்சும் பாத்தாங்க. அது ஓரளவுக்கு பலன் கொடுக்கவே, நம்மளும் அவங்க செய்தத தொடர்ந்து செய்யறோம்.

முடியல என்னால !!! யாராவது எனக்கு கொஞ்சம் சுத்திப் போடுங்களேன் !!!

No comments:

Post a Comment