விளக்கு வைப்போமா ?
ஏன்? எதுக்கு? விளக்கு வெச்சாத்தான் சாமி வீட்டுக்கு வருமா? இப்பிடியே கேள்வி கேட்டே காலம் கடத்திருவோம்... ஹ்ம்ம்ம்...
பதில் தேடுவோமா? நம்ம தேடிட்டோம்லே... தேடிப்புடிச்சி படிச்சதில புரிஞ்சது இது தான்.
வெளிச்சம் ஞானத்தையும் இருட்டு அஃஞானத்தையும் குறிப்பது. வெளிச்சம் வந்தா இருட்டு விலகறது மாதிரி ஞானம் அஃஞானத்தை விலக்கிடுது!
இப்போ, சாமி தான் எல்லாம் தெரிஞ்சவராச்சே! அப்போ, சாமி = ஞானம். ஆனா, ஞானம் = வெளிச்சம் ஆச்சே ! அதனால சாமி = வெளிச்சம். அதனாலதான் விளக்கு ஏத்தி வெச்சு நம்ம மனசுல இருக்க இருட்டு எல்லாம் போக்கணும் சாமி-ன்னு வேண்டிக்கறோம்.
ஆனா, எந்த விளக்கு போட்டாலும் தானே இருட்டு போகுது? எதுக்கு எண்ணெய் விளக்கு வெக்கணும்? ம்ம்ம்... அதாவது, எண்ணெய் விளக்குல நாம விடற எண்ணெய், நம்முடைய தீய எண்ணங்கள். திரி, நம்முடைய அகங்காரம். நாம விளக்கு வெக்கும்போது, வெளிச்சமாகிய ஆன்ம ஞானம் நம்முடைய தீய எண்ணங்களை (எண்ணெய்) மெல்ல அழித்து, அகங்காரத்தையும் (திரி) கடைசில அழிச்சிடும். இதுக்கு தான் எண்ணெய் விளக்கு வெக்கிறது.
ஒரு சின்ன விளக்கு வெக்கிறதுக்கு இவ்ளோ பெரிய உள்ளர்த்தம். ம்ம்ம்ம். சரி, நான் போய் விளக்கு வெச்சிட்டு வர்றேன். அடுத்தது எத பத்தி எழுதறதுன்னு ஞானம் வருதான்னு பாப்போம் !!!