Friday, January 27, 2012

கோலம் !!!




வீட்டு வாசல்லே கோலம் போட்டு எவ்வளவோ காலம் ஆச்சு !!! ஹ்ம்ம்ம்...

ஆமாம்... ஏன் கோலம் போடறோம்? அம்மா கிட்ட கேட்டேன். சின்ன வயசிலேயே கேட்டேன். அம்மா சொன்னாங்க, "எறும்பு, பூச்சி, காக்கா, குருவி எல்லாம் சாப்பிடறதுக்காக" - ன்னு !!! நான் கேட்டேன் "அதுக்கு எதுக்கு கோலம் போடணும்? சாப்பாடு வெச்சிட்டு போலாமே?". எப்புடி புத்திசாலித்தனமா கேள்வி கேட்டு மடக்குனேன் பாருங்க எங்கம்மாவ !

எங்கம்மா எனக்கு அம்மா இல்லையா ! அதனால என் களிமண் மூளைல பதிஞ்சு போற மாதிரி வெளக்கம் சொன்னாங்க. 

"சின்ன சின்ன ஜீவ ராசிக்கெல்லாம் தானியம் தான் சரியான சாப்பாடு. அதுக்காக தினமும் கொஞ்சம் தானியத்தை கொண்டு போய் கொட்டி வெச்சு அதுங்கள சோம்பேறி ஆக்க வேணாம். எப்பவும் போல தேடி தேடி சாப்பிடட்டும், ஆனா கொஞ்சம் கஷ்டமில்லாம தேடி சாப்பிடட்டுமேன்னு தான் தானியமான அரிசிய பொடி பண்ணி, சாப்பாடு மாதிரி குமிச்சு வெக்காம, வளைச்சு வளைச்சு போட்டு வெக்கிறோம். அதுவே வீட்டு வாசல்லே போடறதுனாலே, அழகா சீரா போடறோம். பாக்கவும் நல்லாருக்கும், சின்ன சின்ன ஜீவ ராசிங்களுக்கு பசியாத்தின மாதிரியும் இருக்கும்."

ம்ம்ம்... அம்மா சொன்னது சரியாத்தானே படுது. தேடி புடிச்சு படிச்சும் பாத்தேன். இதையேத்தான் அவங்களும் சொல்றாங்க. சரி... நல்லதுக்கு தானே சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க... முடிஞ்ச வரைக்கும் போடுவோம், கோலம்.

No comments:

Post a Comment