Thursday, January 26, 2012

பிள்ளையார் சுழி !!!




பிள்ளையார் சுழி போட்டாச்சு :-)

நான் மட்டுமா பிள்ளையார் சுழி போடுறேன்? ஊரே போடுது :-) ஏன் பிள்ளையார் சுழி போடுறோம்னு சொல்லட்டுமா ? நான் படிச்சதை சொல்றேன் கேட்டுக்கோங்க !!!

ஓலைச்சுவடி எழுதின காலத்தில, "அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே" - ன்னு எழுதிட்டு தான் எழுத ஆரம்பிச்சாங்க. அதுவே கொஞ்ச காலம் கழிஞ்சு, "அறிவோம்"- ங்கற வார்த்தை "அரி ஓம்" ஆச்சு !!! கொண்டு வந்துட்டாங்களா இங்கயும் சாமிய :-) ஆனா ஒண்ணு ! அந்த காலத்துல, பாட்டு எழுத ஆரம்பிக்கும்போதும், பாட்டு எழுதி முடிக்கும் போதும், பாட்டுக்கு எண்ணிக்கை போடும்போதும் கூட பிள்ளையார் சுழி போட்டாங்க !!!

இப்படி ஒரு பக்கம் சொல்றாங்க! இன்னொரு பக்கமும் இருக்கில்ல! அவங்க என்ன சொல்றாங்கன்னா, ஓலைச்சுவடியுடைய பதம் பார்க்க ஒரு சுழியப் போட்டு ஒரு கோடு போட்டு பாத்தாங்களாம். இது எப்படி இருக்கு?

ரெண்டுமே சரியாத்தான் படுது!!! நம்ம எப்பவுமே தெளிவா இருப்போம் இல்லையா ?!?!

சரி. இதுலே எங்கே பிள்ளையார் வந்தார்? யாருக்குமே தெரியலை! எல்லா விஷயத்துலயும் சாமி பெயர் சொல்லி செய்ய வெச்ச நம்ம தாத்தா பாட்டிக்கு, இது ஒரு பெரிய விஷயமா? இங்கயும் கொண்டு வந்துட்டாங்க சாமியை :-)

ஏன் சொல்றேன்னா... நம்ம தாத்தா பாட்டி எல்லாரும் பிள்ளையார கும்பிட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே... கல், மரம், ஓலைச்சுவடி எல்லாத்துலயும் எழுதவும் ஆரம்பிச்சிட்டிருந்தாங்களே !!!

சரி... பிள்ளையார்னு நெனச்சு போட்டாலும், "எல்லாம் நல்லதுக்கே"ன்னு நெனச்சு போட்டாலும், பேனா சரியா எழுதுதான்னு பாக்க போட்டாலும், நல்லதுக்கு போடற எல்லா சுழியும் "பிள்ளையார் சுழி" தான் !!!

No comments:

Post a Comment